குடியரசுத் தலைவர் செயலகம்
செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் அரசியல் தலைவர்களுடன் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு
प्रविष्टि तिथि:
20 MAY 2022 10:43AM by PIB Chennai
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசு முறைப் பயணமாக கரிபீயன் தீவுகளை சேர்ந்த செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் நாடுகளின் தலைநகரான கிங்ஸ்டவுனுக்கு 18-ம் தேதி சென்றார். இந்தியக் குடியரசு தலைவர் ஒருவர் இங்கு அரசு முறைப் பயணம் செல்வது இதுவே முதன்முறையாகும்.
முன்னதாக, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் நாடுகளின் ஆர்கைல் விமான நிலையத்துக்கு சென்ற ராம்நாத் கோவிந்த்தை செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் நாடுகளின் கவர்னர் ஜெனரல் திருமதி. டேம் சூசன் டௌஹான், பிரதமர் டாக்டர். ரால்ஃப் கொன்சால்வாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
நேற்றைய தினம், செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் நாடுகளின் அரசு இல்லத்தில், அந்நாடுகளின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கவர்னர் ஜெனரல் திருமதி. டேம் சூசன் டௌஹான், பிரதமர் டாக்டர். ரால்ஃப் கோனாவால்ஸ் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை அளிப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தகவல் பரிமாற்றம், வரி வசூல் உதவி மற்றும் வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் நாட்டிலுள்ள, பழைய கால்டர் சமூக மையத்தை புதுப்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் நாடுகளின் பிரதமர் டாக்டர். ரால்ஃப் கொன்சால்வாஸ் கையெழுத்திட்டு, பரிமாறி கொண்டனர்.
இதையடுத்து, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரானாடைன்ஸ் நாடுகளின் தலைநகரான கிங்ஸ்டவுனிலுள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த், அங்கு இந்தியாவின் வெள்ளை சந்தன மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற இந்திய கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826826
***************
(रिलीज़ आईडी: 1826909)
आगंतुक पटल : 215