குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கத்தை திறந்து வைத்து உரையாற்றினார்

Posted On: 17 MAY 2022 11:57AM by PIB Chennai

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு மே 15-ம் தேதி மாலை சென்றடைந்தார் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று, கிங்ஸ்டனில் உள்ள தேசிய மாவீரர் பூங்காவுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த், வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் சர் பெடரிக் ஆலனை அவரது அதிகாரப்பூர்வ கிங்ஸ் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, ஜமைக்கா, இந்தியா இடையே தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பான சேவைகள், மருத்துவம், மருந்துத்துறை, கல்வி, விளையாட்டு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். கொவிட் 19 பெருந்தொற்று காலத்திலும், இந்தியா, ஜமைக்கா நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம், தொழில், விவசாயம் போன்ற துறைகளில் இருநாடுகளின் முதலீடுகள் அதிகரித்துள்ளதாக ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

மேலும், இருநாடுகளிடையேயான கல்வி, வளர்ச்சி தொடர்பாக பேசிய ராம்நாத் கோவிந்த், தனது வளர்ச்சிப் பாதையின்போது பெற்ற அனுபவ அறிவு, திறன்களை ஜமைக்கா போன்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்டார். அதன் பின்னர் ஜமைக்கா இல்லத்தில், பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னசை சந்தித்து பல்வேறு துறைகள் தொடர்பான வளர்ச்சிகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து இருநாடுகளிடையே ராஜீய ரீதியிலான பயிற்சித் துறையில் ஒத்துழைப்புக்கான வெளியுறவுபு அமைச்சகம் மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம், ஜமைக்காவின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்க அமைச்சம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஜமைக்காவில் இந்தியர்கள் அதிக அளவில் வாழும் பகுதிக்கு அம்பேத்கர் சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரண்டு நாடுகளும் புவியியல் ரீதியாக வெவ்வேறு திசைகளில் இருந்தாலும், அவற்றின் இடையே நல்லுறவு நீடிப்பதாக தெரிவித்தார்.

***************


(Release ID: 1826094) Visitor Counter : 178