குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அகில் பாரதிய கோலி சமாஜத்தின் பொன் விழா கொண்டாட்டங்கள்: குடியரசுத் தலைவரின் உரை காணொளி வாயிலாக ஒளிபரப்பு

Posted On: 15 MAY 2022 8:57AM by PIB Chennai

நேற்று (மே 14, 2022)  நடைபெற்ற அகில் பாரதிய கோலி சமாஜத்தின் பொன் விழா கொண்டாட்டங்களில், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்தின் உரை காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.

அகில் பாரதிய கோலி சமாஜம் தொடங்கப்பட்டது முதல் அதனுடனான தமது உறவை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர், இந்த சங்கத்தின் பொன்விழா, தனிப்பட்ட முறையில் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். எந்த ஒரு நிறுவனத்தைக் கட்டமைக்கவும், வளர்க்கவும் மிக கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. எனவே அகில் பாரதிய கோலி சமாஜத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை நோக்கி நாம் முன்னேறுவது அனைவருக்கும் பெருமை தரும் விஷயமாகும். இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சமூகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருப்பது மேலும் திருப்திகரமாக உள்ளது.

முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட மக்கள் சமுதாயத்திற்கு சரியான பாதையை வகுப்பதற்காக சிறுசிறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  அதன்பின் வந்த தலைமுறையினர் முன்னெடுத்துச் சென்றனர். கோலி சமாஜத்தின் அடையாளத்தையும் கண்ணியத்தையும் இளைய தலைமுறையினர் இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வார்கள் என்றும், சமூகத்தின் உறுப்பினர்கள் நவீனத்துவம், உணர்திறன், மனிதநேயம் மற்றும் தேசபக்திக்கான உதாரணங்களைத் தொடர்ந்து முன்வைப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825448

**************


(Release ID: 1825481) Visitor Counter : 161