நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐக்கிய அரபு எமிரேட்டின் பொருளாதார அமைச்சர் மேன்மை தங்கிய அப்துல்லா பின் டௌக் அல் மாரி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை சந்தித்தார்

Posted On: 12 MAY 2022 2:24PM by PIB Chennai

ஐக்கிய அரபு எமிரேட்டின் பொருளாதார அமைச்சர் மேன்மை தங்கிய அப்துல்லா பின் டௌக் அல் மாரி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை இன்று புதுதில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட் இடையே வலுவான பொருளாதார மற்றும் வணிக ஈடுபாடு குறித்தும் பன்முக இருதரப்பு  உறவுகளை இயக்குகின்ற விரிவான உத்திகள் வகுத்தலில் பங்களிப்பு குறித்தும் இருதரப்பினரும் விவாதித்தனர்.

 இந்தியா - யுஏஇ விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்: பொற்காலத்தை கட்டவிழ்த்தல் என்பது குறித்த பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மேன்மை தங்கிய அப்துல்லா பின் டௌக் அல் மாரியும், யுஏஇ உயர்நிலை தூதுக்குழுவினரும் புதுதில்லி வந்துள்ளனர். இத்தகைய தொடர்ச்சியான பரிமாற்றங்களும், இருதரப்பு சந்திப்புகளும் இந்தியாவின் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துவதோடு தற்போதுள்ள துறை ரீதியான ஏற்பாடுகளில் அதிகபட்சம் பயன்படுத்தும் புதிய துறைகளை கண்டறிய உதவும்.

****


(Release ID: 1824770)