ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வில் மொத்தம் 1,28,708 பேர் பங்கேற்றனர்

Posted On: 11 MAY 2022 5:11PM by PIB Chennai

தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளுக்கான இரண்டாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வை 2022 மே 9 மற்றும் 10-ம் தேதிகளில் நிலை 6 (7124 பணியிடங்கள்) மற்றும் நிலை 4 (161 பதவிகள்) ஆகியவற்றிற்கு இந்திய ரயில்வே நடத்தியது.

மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 1,80,882 ஆக இருந்த நிலையில், அவர்களில் 1,28,708 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர். ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முதன்முறையாக விண்ணப்பதாரர்களுக்கு செயல்படுத்தப்பட்டது.

மூன்று ஷிப்டுகளில் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்பட்டது, மே 9 அன்று நிலை 6-க்கு இரண்டு ஷிப்ட்கள் நடத்தப்பட்டன. மே 10-ம் தேதி நிலை 4-க்கு ஒரு ஷிப்ட் நடத்தப்பட்டது.

25 மாநிலங்களில் உள்ள 111 நகரங்களில் அமைந்துள்ள 156 மையங்களில் நிலை 6 தேர்வு நடத்தப்பட்டது. நிலை 6-க்கான மொத்த வருகை சுமார் 74% ஆகும்.

17 மாநிலங்களில் உள்ள 56 நகரங்களில் அமைந்துள்ள 89 மையங்களில் நிலை 4 தேர்வு நடத்தப்பட்டது. மொத்த வருகை சுமார் 60.5% ஆகும்.

தேர்வர்களின் வசதிக்காக இந்திய ரயில்வேயால் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824449

***************


(Release ID: 1824492) Visitor Counter : 275