சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
40 டிஜிட்டல் சுகாதார சேவை செயல்பாடுகள் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன
Posted On:
11 MAY 2022 3:31PM by PIB Chennai
தனது முதன்மையான திட்டமான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் கடந்த மூன்று மாதங்களில் கூடுதலாக 13 டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகளை இணைத்துள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்க சாண்ட்பாக்ஸ் சூழலியலில் இவை இணைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, 2021 செப்டம்பர் 27 அன்று தேசிய அளவில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதில் இணைக்கப்பட்டுள்ள சேவைகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 16 அரசு செயல்பாடுகளையும் 24 தனியார் துறை செயல்பாடுகளையும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் பங்குதாரர் சூழலியல் தற்போது தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் மற்றும் சுகாதார தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் இடையேயான இந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் பல்வேறு டிஜிட்டல் தளங்களுக்கு இடையே உள்ள இடைவெளி நிரப்பப்படும். இதன் வாயிலாக சேவைகளை இன்னும் சிறப்பான முறையில் வழங்க முடியும்.
"ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்க சூழலியலின் ஒரு பகுதியாக இணைந்துள்ள சுகாதார தொழில்நுட்ப புதுமையாளர்களை நாங்கள் வரவேற்கிறோம். திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 7 மாதங்களாக இதில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆர் எஸ் சர்மா கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்க சாண்ட்பாக்ஸ் சூழலியல் குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://sandbox.abdm.gov.in/ அல்லது https://abdm.gov.in/home/partners ஆகிய இணைப்புகளை பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1824411
***************
(Release ID: 1824440)