தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் திரு அனுராக் தாக்கூருடன், இந்திய திரைப்பட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
Posted On:
10 MAY 2022 6:02PM by PIB Chennai
கேன்ஸ் திரைப்பட விழா-2022-ன் தொடக்க நாளான 17 மே 2022 அன்று திரு அனுராக் தாக்கூருடன், இந்திய திரைப்பட தூதுக்குழுவின் ஒரு பகுதியாக செல்லும் இந்தியா முழுவதும் உள்ள திரையுலகைச்சேர்ந்த சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ள 75 வது கேன்ஸ் திரைப்பட விழா, இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு மாபெறும் நிகழ்ச்சியாக அமைய உள்ளது.
மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் இந்திய குழுவினருக்கு தலைமையேற்று கேன்ஸ் செல்ல இருக்கிறார். இந்தியா முழுவதுமுள்ள திரைப்பட துறையைச்சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த தூதுக்குழுவில் இடம்பெறும் திரையுலக நட்சத்திரங்களின் பட்டியல் வருமாறு:
- திரு அக்ஷயகுமார் (பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்)
- திரு ஏ ஆர் ரஹ்மான் (சர்வதேச இசையமைப்பாளர்)
- திரு மாமே கான் (கிராமப்புற இசையமைப்பாளர், பாடகர்)
- திரு நவாஸூதீன் சித்திக் ( பாலிவுட் நடிகர்)
- செல்வி நயன்தாரா (தமிழ், மலையாள நடிகை)
- செல்வி பூஜா ஹெக்டே (இந்தி, தெலுங்கு நடிகை)
- திரு பிரசூன் ஜோஷி (திரைப்பட தணிக்கை வாரிய தலைவர்)
- திரு ஆர் மாதவன் ( நடிகர் & தயாரிப்பாளர்) முதன் முறையாக ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸில் திரையிடப்படுகிறது.
- திரு ரிக்கி கேஜ் (இசையமைப்பாளர்)
- திரு சேகர் கபூர் (திரைப்பட தயாரிப்பாளர்)
- செல்வி தமன்ணா பாட்டியா (தமிழ்,தெலுங்கு, இந்தி நடிகை)
- செல்வி வாணி திரிபாதி (நடிகை)
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824206
***************
(Release ID: 1824229)
Visitor Counter : 233