தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
டிடி இந்தியா யூடியூப் 2 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை
प्रविष्टि तिथि:
09 MAY 2022 5:57PM by PIB Chennai
பிரசார் பாரதியின் ஆங்கில செய்தி சேனல் டிடி இந்தியா சமீபத்தில் டிவி மற்றும் டிஜிட்டல் இரண்டிலும் அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. சமீபத்தில் யூடியூப்பில் 2 லட்சம் சந்தாதாரர்களை தாண்டியது. தொலைக்காட்சி ரீச் அடிப்படையில், டிடி இந்தியா நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
சமீபத்திய BARC தரவுகளின்படி, டிடி இந்தியா 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டியது. இது ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சிகளிலேயே அதிகம். டிடி இந்தியாவுக்கான பார்வையாளர்கள் கூட ஒரு நிலையான மேல்நோக்கி வாராந்திர வளர்ச்சியைக் கண்டுள்ளனர். கடந்த எட்டு வாரங்களில் கிட்டத்தட்ட 150% மொத்த வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
டிடி இந்தியா, இந்தியாவிற்கும் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் இடையே ஒரு பாலமாகவும் செயல்படுகிறது. டி டி இந்தியா அதன் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் பற்றிய இந்தியாவின் கண்ணோட்டத்தை சர்வதேச பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823937
***************
(रिलीज़ आईडी: 1823985)
आगंतुक पटल : 208