குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துணை ராணுவ படையினரின் 107 கேன்டீன்களில் (விற்பனையகங்களில்) காதிப் பொருட்களின் விற்பனையை உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கிவைத்தார்

Posted On: 09 MAY 2022 5:21PM by PIB Chennai

காதி கைவினைப் பொருட்களின் விற்பனையை துணை ராணுவப் படையினரின் விற்பனையகங்களில் தொடங்கியிருப்பதன் மூலம், மத்திய அரசின் சுதேசி இயக்கம் விரிவடைந்துள்ளது. மத்திய ஆயுத காவல் படையினரின் 107 விற்பனையகங்களின் காதிப் பொருட்களின் விற்பனையை திங்கள் அன்று தொடங்கிவைத்த உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நாட்டில் உள்ள துணை ராணுவப் படையினரின் அனைத்து விற்பனையகங்களிலும் வெகு விரைவில், காதிப் பொருட்கள் விற்பனை தொடங்கும் என்றார்.

அசாமில் உள்ள காமல்பூரில் எல்லைப்பாதுகாப்புப் படையினரின் மத்திய பணிமனை மற்றும் விற்பனையகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர், “காந்திஜிக்கு காதி என்பது சுதேசியின் அடையாளமாக இருந்தது. இது பிரதமர் திரு நரேந்திர மோதியின் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கும் கருவியாகவும் உள்ளது.  காதி என்பது தூய்மையை உறுதி செய்கிறது. துணை ராணுவப்படையினரின் 107 விற்பனையகங்களில் காதிப் பொருட்கள் விற்பனையால்  நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். நாட்டில் உள்ள துணை ராணுவப் படையினரின் அனைத்து விற்பனையகங்களிலும் வெகு விரைவில், காதிப் பொருட்கள் விற்பனை தொடங்கும்” என்றார்.  

பிரதமர் தலைமையின் கீழ் காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் 2021-22-ல் ரூ1.15 லட்சம் கோடி வருவாய் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும்  சுமார் 250 சதவீதம் வளர்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியில் அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, காதி மற்றும்  கிராமத்தொழில்கள்  ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா, உள்துறை செயலாளர் திரு அஜய் குமார் பல்லா, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ்  போலீஸ் படையின் தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823912

------ 


(Release ID: 1823965) Visitor Counter : 179