புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
மேற்கூரை சூரிய சக்தி தகடுகளை பொருத்த இந்திய சூரிய சக்தி மின் உற்பத்தி கழகம் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
Posted On:
09 MAY 2022 1:29PM by PIB Chennai
மத்திய ஆயுத காவல் படை மற்றும் தேசிய பாதுகாப்புப் படை வளாகங்களில் மேற்கூரை சூரிய சக்தி உற்பத்திக்காக, இந்திய சூரிய சக்தி மின் உற்பத்தி கழகம் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் திரு. அஜய் குமார் பல்லா, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிச்சக்தித்துறை செயலாளர் திரு.இந்து சேகர் சதுர்வேதி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் திரு. ராகேஷ் குமார் சிங், இந்திய சூரிய சக்தி மின் உற்பத்தி கழக நிர்வாக இயக்குனர் திருமதி சுமன் சர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் பேசிய திருமதி சுமன் சர்மா, “பருவநிலை தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்காக பணியாற்றுவதில் இந்திய சூரிய சக்தி மின் உற்பத்தி கழகம் மகிழ்ச்சியடைவதுடன், நாட்டின் தொலை தூரபகுதிகளுக்கும் மேற்கூரை சூரியசக்தி திட்டத்தை விரிவுப்படுத்த ஆவலுடன் உள்ளது்“ என்றார்.
இந்த உடன்படிக்கை நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு பசுமை எரி சக்தியை வழங்குவதற்கான நடவடிக்கையின் முதல்படி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பில் காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823829
***************
(Release ID: 1823886)
Visitor Counter : 166