பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த “தலசீமியா 2022- வில் உள்ள சவால்கள்” என்ற இணையக் கருத்தரங்கில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா உரையாற்றினார்

Posted On: 08 MAY 2022 6:18PM by PIB Chennai

உலக தலசீமியா தினத்தையொட்டி, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, இன்று புது தில்லியில் “தலசீமியா 2022- வில்  உள்ள சவால்கள் என்ற இணைய கருத்தரங்கில் மெய்நிகர் வடிவில் உரையாற்றினார். பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தலசீமியா சங்கம் இணைந்து இதை ஏற்பாடு செய்திருந்தன. இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.

 

மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தமது உரையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை நாம் கொண்டாடும் போது, அமிர்த காலத்தின் போது இந்தியாவை தற்சார்பை நோக்கி உந்தும் புதிய தீர்மானங்களை மேற்கொள்வது பிரதமரின் தொலைநோக்கு பார்வையாகும் என்றார். இந்த திசையில், தலசீமியா பிரச்சனையை கையாள்வதற்கான புதிய தீர்வுகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“தலசீமியா பிரச்சனையில் கவனத்தை அதிகரிப்பதற்கு அவசியமான ஆசிரியர்கள், மாணவர்கள், அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம் தேவை. மேலும், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு ஆசிரியர் கூடுதலாக 5 நிமிடம் ஒதுக்க வேண்டும் என்றும், அங்கன்வாடி பணியாளர்கள் கிராம மக்களுக்கு நோய் மற்றும் அதன் தடுப்பு குறித்தும் தெரிவிக்க வேண்டும்’’ என்றும் திரு அர்ஜூன் முண்டா கூறினார்.

 

 

"விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் தவிர, மலிவான மருந்துகள் கிடைப்பது மற்றும் சமூக இரத்த தானம் மற்றும் கிராமப்புறங்களில் ஊக்குவிக்கப்பட வேண்டும்" என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1823666

*********



(Release ID: 1823678) Visitor Counter : 241