இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரைவு தேசிய இளைஞர் கொள்கை மீதான கருத்துக்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வரவேற்கிறது

Posted On: 05 MAY 2022 11:41AM by PIB Chennai

புதிய தேசிய இளைஞர் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு அனைத்து சம்பந்தப்பட்டவர்களையும் மத்திய  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதுள்ள 2014-ம் ஆண்டின் தேசிய இளைஞர் கொள்கையை மத்திய அரசு ஆய்வு செய்து, புதிய தேசிய வரைவு கொள்கையை தயாரித்துள்ளது.  2030-ம் ஆண்டுக்குள்  இலக்குகளை அடையும் வகையில் 10 ஆண்டு கால இந்தியாவின் இளைஞர் மேம்பாடு குறித்த தொலைநோக்கை புதிய வரைவு கொள்கை கொண்டுள்ளது. இந்தியாவை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லும்வகையில் இளைஞர்களின் ஆற்றலை வெளிக்கொணரவும், நீடித்த இலக்குகளை அடையவும் இது வகை செய்யும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு; இளைஞர் தலைமை மற்றும் மேம்பாடு; சுகாதாரம், உடல்தகுதி மற்றும் விளையாட்டு; சமூகநீதி ஆகிய ஐந்து முன்னுரிமை பகுதிகளில் இளைஞர் மேம்பாட்டை ஊக்குவிக்க வரைவுக் கொள்கை விழைகிறது.

 சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கருத்துகள், ஆலோசனைகளை 45 நாட்களுக்குள் (2022 ஜூன் 13க்குள்), dev.bhardwaj[at]gov[dot]in  or policy-myas[at]gov[dot]in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

Click here for draft National Youth Policy.

***************


(Release ID: 1822884) Visitor Counter : 364