உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted On: 05 MAY 2022 10:44AM by PIB Chennai

முழு நிதியாண்டிற்கான (ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை) உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தைப் பெறும் தகுதி வரம்பைக் கடந்திருக்கும் ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களின் உற்பத்தியாளர்கள், விண்ணப்பிப்பதற்கான சாளரத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திறந்துள்ளது.  இத்தகைய உற்பத்தியாளர்கள் https://www.civilaviation.gov.in/application-pli-scheme என்ற முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம். மே 4, 2022 தேதியிட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஆணையை இங்கே காணலாம்:https://www.civilaviation.gov.in/sites/default/files/Application%20for%20PLI%20scheme%20for%20drones%20and%20drone%20components.pdf

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நேரம் மே 20, 2022, இரவு 11:59. நிதி முடிவுகள் மற்றும் இதர குறிப்பிட்ட ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்த பிறகு திட்ட பயனாளிகளின் இறுதிப்பட்டியல் ஜூன் 30 அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக, 10 மாத காலத்திற்கான (ஏப்ரல் 1, 2021 முதல் ஜனவரி 31, 2022 வரை) விண்ணப்பங்களை அவற்றின் நிதி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து, 14 பயனாளிகள் அடங்கிய தற்காலிகப் பட்டியலை கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அமைச்சகம் வெளியிட்டிருந்தது. 5 ட்ரோன் உற்பத்தியாளர்களும், 9 ட்ரோன் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்களும் இதில் அடங்கும். ஆண்டுக்கு இந்திய ரூபாயில் 2 கோடி விற்பனை விற்றுமுதல் உள்ள டிரோன் நிறுவனங்களும், இந்திய ரூபாயில் 50 லட்சம் விற்பனை விற்றுமுதல் உள்ள ட்ரோன் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்களும், விற்பனை விற்றுமுதலில் 40%க்கும் அதிகமான மதிப்புக்கூட்டலும் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822838

***************

 

(Release ID: 1822838)



(Release ID: 1822880) Visitor Counter : 173