தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத் தொடர்பு மற்றும் தகவல், தொடர்பு தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒத்துழைப்பதற்கு சி-டாட், சி-டாக் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
Posted On:
02 MAY 2022 4:08PM by PIB Chennai
மத்திய அரசின் தகவல், தொடர்பு அமைச்சகத்தில் உள்ள தொலைத்தகவல் தொடர்புத்துறையின், முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தன்னாட்சி அறிவியல் அமைப்பான நவீன கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக்) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை ஊக்கப்படுத்த தொலைத் தொடர்பு மற்றும் தகவல், தொடர்பு தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒத்துழைக்கும் நோக்கத்துடன் 2022 ஏப்ரல் 30 அன்று பெங்களூருவில் செமிகான் இந்தியா 2022 நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்த நிகழ்வில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், முன்னிலையில், சி-டாட் இயக்குநர் திரு டேனியல் ஜெபராஜ், சி-டாக் தலைமை இயக்குநர் திரு இ.மகேஷ், ஆகியோரும் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
4ஜி / 5ஜி, அகண்ட அலைவரிசை, ஐஓடி / எம்2எம் உள்ளிட்ட துறைகளில் மேம்பாட்டுக்கான பணிகளில் ஒத்துழைக்கவும், இணைந்து செயல்படவும் சி-டாட் மற்றும் சி-டாக் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. குறிப்பிட்ட பங்களிப்பு மற்றும் பொறுப்புகளுக்கு தேவைப்படும் போது குறிப்பிட்ட திட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822014
***************
(Release ID: 1822026)