பிரதமர் அலுவலகம்
மும்பையில் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
24 APR 2022 8:34PM by PIB Chennai
ஸ்ரீ சரஸ்வதாய நமஹ!
புனிதமான இந்த விழாவில் பங்கேற்றுள்ள மகாராஷ்ட்ர ஆளுநர் திரு பகத் சிங் கோஷியாரி அவர்களே, மகாராஷ்ட்ர சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் திரு தேவேந்திர ஃபட்நவிஸ் அவர்களே, மகாராஷ்ட்ரா அமைச்சர் திரு சுபாஷ் தேசாய் அவர்களே, மதிப்பிற்குரிய உஷா அவர்களே, ஆஷா அவர்களே, ஆதிநாத் மங்கேஷ்கர் அவர்களே மாஸ்டர் தீனாநாத் நினைவு அறக்கட்டளையின் உறுப்பினர்களே, இசை மற்றும் கலை உலகைச் சேர்ந்த சிறப்புமிக்க நண்பர்களே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களேஃ
மதிப்பிற்குரிய இருதயநாத் மங்கேஷ்கர் அவர்களும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்கவிருந்தார். ஆனால், ஆதிநாத் அவர்கள், கூறியது போல உடல்நலக்குறைவு காரணமாக அவரால் இங்கு வர இயலவில்லை. அவர் விரைந்து குணமடைய நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே!
இங்கே வருவதற்கு நான் மிகவும் தகுதியானவன் அல்ல என்பதை நான் அறிவேன். ஏனெனில், சிறப்புமிக்க இசை போன்ற விஷயத்தை நான் கற்றறிந்தவன் அல்ல. ஆனால், கலாச்சாரம் பற்றிய பார்வை கொண்டிருப்பதால் வருகை தந்துள்ளேன். இசை என்பது ஈடுபாடு மற்றும் உணர்ச்சியோடு சம்பந்தப்பட்டது என நான் நினைக்கிறேன். உலகில் வெளிப்படுத்த முடியாததை வெளிப்படுத்துவது இசை. ஆற்றலோடும், உணர்வோடும், கருத்தைத் தெரிவிப்பது நாதம் (ஒலி). உணர்ச்சிகளோடும், உணர்வுகளோடும் மனதை நிறைத்து படைப்பின் உச்சநிலைக்கு கொண்டு செல்வது சங்கீதம் (இசை). நீங்கள் அசைவற்று அமர்ந்திருக்கலாம், ஆனால் உங்கள் கண்களிலிருந்து கண்ணீரை வழியச் செய்யும். அத்தகைய ஆற்றலை இசை கொண்டிருக்கிறது. உங்களுக்குள் வீரத்தையும், தாய்மை அன்பையும் நிறைப்பது இசை. இது உங்களை தேசப்பக்திக்கும் கடமை உணர்வுக்கும் அழைத்துச் செல்லும். இந்த ஆற்றலையும், இசையின் சக்தியையும், லதா தீதியிடம் காணும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். நமது கண்களால் அவரைக் காணும் பெருமையை நாம் பெற்றிருந்தோம். மங்கேஷ்கரின் குடும்பம், பல தலைமுறைகளுக்கு இந்த யாகத்திற்கு தியாகம் செய்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை லதா தீதி இசை அரசி அதே போல் எனது மூத்த சகோதரி, லதா தீதியிடமிருந்து ஒரு சகோதரியின் அன்பை பெறுவதைவிட மகத்தான பெருமை என்ன இருக்க முடியும்? பல பத்தாண்டுகளுக்கு பின் இந்த ஆண்டின் ராக்கி விழாவின் போது, தீதி இங்கேயில்லை. இந்த விருதினை பெறுவதற்கான நிகழ்ச்சிக்கு எனது தேதி குறித்து ஆதிநாத் அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நான் பெற்றேன். எதையும் கேட்காமல் உடனடியாக நான் ஒப்புக் கொண்டேன். ஏனென்றால் என்னால் அதை மறுக்க இயலாது. இந்த விருதினை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். லதா தீதி அவர்கள், நாட்டு மக்களுக்காக வாழ்ந்தது போல் அவரது பெயரிலான விருதும் நாட்டு மக்களுக்கானது.
நண்பர்களே!
லதா அவர்களின் பூதஉடல் பயணம் நமது நாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழாவைக் கொண்டாடும் காலத்தில் முடிந்தள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு முன் அவர், குரல் கொடுத்தார். நாட்டின் இந்த 75வது ஆண்டுகால பயணமும், அவரின் குரலோடு தொடர்புடையது. லதா அவர்களின் தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் பெயரும் இந்த விருதுடன இணைந்துள்ளது. இந்த நாட்டிற்கு மங்கேஷ்கர் குடும்பத்தின் பங்களிப்புக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம்.
இசையோடு, தேசபக்த உணர்வும், லதா தீதியிடமும் அவரது தந்தையிடமும் இருந்தது. விடுதலைப் போராட்டக் காலத்தின் போது சிம்லாவில், பிரிட்டிஷ் வைஸ்ராயை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் வீர சவார்க்கர் எழுதிய பாடலை. தீனநாத் அவர்கள் பாடினார். பிரிட்டிஷ் ஆட்சியில் எதிர்த்த இந்த பாடலை வைஸ்ராய் முன்னிலையில் பாடும் துணிச்சலை தீனாநாத் அவர்களுக்கு தந்தது தேசபக்த உணர்வாகும். இசை உலகத்தோடு தொடர்புடைய அனைவரும் புதிய இந்தியாவிற்கு வழிகாட்டும் பொறுப்பை செயல்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பில் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819633
-----
(Release ID: 1821391)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam