வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை குறிக்கும் வகையில் வடகிழக்கு திருவிழா
Posted On:
29 APR 2022 2:09PM by PIB Chennai
காங்டாக்கில் நாளை (ஏப்ரல் 30, 2022) நடைபெற உள்ள கருத்தரங்கில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
‘வடகிழக்கு மாநிலங்களில் நகர்ப்புற வளர்ச்சி: பொலிவுறு நகரப் புரட்சி’ என்பதில் இந்நிகழ்ச்சி கவனம் செலுத்தும். சிக்கிம் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உணவுத்துறை அமைச்சர் திரு அருண் உப்ரட்டி மற்றும் மத்திய - மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் தொடக்க அமர்வின் போது, ஆன்லைன் கட்டட அனுமதி அமைப்பு முறைப்படி தொடங்கப்படும்.
காலை அமர்வைத் தொடர்ந்து, தொடர்புடைய தலைப்பில் மூன்று தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறும். காரக்பூரில் உள்ள ஐஐடியின் மூத்த பேராசிரியர்களால் இவை நடத்தப்படும்.
வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை குறிக்கும் வகையில் வடகிழக்கு திருவிழா : ஏப்ரல் 28, 2022 முதல் மே 4, 2022 வரை எட்டு வடகிழக்கு மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது தனது 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுகிறது. நாட்டின் புகழ்பெற்ற வரலாறு, மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை இந்த விழாவின் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சகம் எடுத்துச் செல்லும். மேலும், வடகிழக்கு பிராந்தியத்தின் சாதனைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821233
***************
(Release ID: 1821269)
Visitor Counter : 165