எரிசக்தி அமைச்சகம்

சர்வதேச யோகா தினம் 2022-க்கு முன்னோடியாக யோகா திருவிழாவுக்கு ஏற்பாடு

Posted On: 29 APR 2022 1:45PM by PIB Chennai

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மின்சார அமைச்சகம் சார்பில், புதுதில்லியில் உள்ள நேரு பூங்காவில் இன்று யோகா திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா  தினமாக கொண்டாடப்படுவதை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தைச் சேர்ந்த யோகா குரு வழிகாட்டுதலில், பொதுவான யோகாசன நடைமுறை குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங், மின்துறை இணையமைச்சர் திரு கிரிஷன் பால், மின்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஆர்இசி, பிஎப்சி, என்டிபிசி, டிஎச்டிசி, பிசிஜிஐஎல் மற்றும் என்எச்பிசி போன்ற பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.  இந்த ஒரு மணி நேர யோகா நிகழ்ச்சி காலை 7 மணி முதல் 8 மணி வரை நடத்தப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தீவிர யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

 

***************(Release ID: 1821264) Visitor Counter : 251