எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக மூன்று மாநிலங்களில் ஒளித்திருவிழாவை ஊரக மின்மயக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது

प्रविष्टि तिथि: 29 APR 2022 1:15PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக மணிப்பூர். ஒடிசா, சத்தீஷ்கர், ஆகிய மூன்று மாநிலங்களில் ஒளித்திருவிழாவை ஊரக மின்மயக் கழகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து கிராமங்களுக்கும், மின்சார கட்டமைப்பை வெற்றிகரமாக வழங்குவதற்கான தீன்தயாள் உபாத்யாயா கிராம ஒளித்திட்டம் தொடங்கப்பட்டதன் 4-வது ஆண்டினை குறிக்கும் வகையில், இந்த விழாவிற்கு ஏப்ரல் 28, தெரிவு செய்யப்பட்டது. 

மணிப்பூர் மாநிலத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்ட கடைசி கிராமமான லீசாங் கிராமத்தில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில், பல பிரமுகர்களும் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர். மின்சார பயன்பாடு, மின் கட்டணம், சிக்கனமான எரிசக்தி ஆகியவற்றில் விழிப்புணர்வை பரவலாக்க பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வினாடி, வினா போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக எல்இடி பல்புகள் வழங்கப்பட்டன.   

*************** 


(रिलीज़ आईडी: 1821263) आगंतुक पटल : 242
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu