தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அஞ்சல் துறை ஆன்லைன் மூலம் தேசிய ஒய்வூதிய திட்டம் NPS சேவைகளை வழங்குகிறது

Posted On: 28 APR 2022 5:04PM by PIB Chennai

தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறை (DoP), தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS - அனைத்து குடிமக்களுக்கான  மாதிரித் திட்டம்), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும் இந்திய அரசின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை, அதன் குறிப்பிட்ட சில அஞ்சலகங்கள் மூலம் 2010-ம் ஆண்டு முதல் நேரடியாக வழங்கி வருகிறது.

அஞ்சல் துறை தேசிய ஓய்வூதியத் திட்டத்தை NPS (அனைத்து குடிமக்களுக்குமான  மாதிரித் திட்டம்) 2022-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் வழங்கி வருகிறது.

18-70 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் எவரும் "தேசிய ஓய்வூதிய அமைப்பு -ஆன்லைன்" என்ற மெனு தலைப்பின் கீழ் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.indiapost.gov.in) சென்று இந்த ஆன்லைன் வசதியைப் பெறலாம்.

குறிப்பிட்ட இணைப்பிற்கான இணையதள முகவரி: https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/NPS.aspx  

இந்த இணையதளத்தில் புதிய பதிவு, ஆரம்ப / அடுத்தடுத்த பங்களிப்பு மற்றும் முறையான முதலீட்டுத் திட்டம் SIP / Options போன்ற வசதிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். அஞ்சல் துறையின் NPS சேவைக் கட்டணம் மிகக் குறைவானது. சந்தாதாரர்கள் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, வருமானவரிச் சட்டம் பிரிவு 80CCD 1(B)-ன் கீழ் NPS-ல் வரி கழிவு பெறத் தகுதியுடையவர்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820961

***************



(Release ID: 1821048) Visitor Counter : 155