இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 2021-கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில், 26 சாதனைகள் படைக்கப்பட்டிருப்பதுடன், பளு தூக்குதலில் ஒரு தேசிய சாதனை முறியடிக்கப்பட்டது
Posted On:
28 APR 2022 3:08PM by PIB Chennai
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி - 2021-ல் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் கோமல் கோஹர், பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பளு தூக்குதல் போட்டியின் 45 கிலோ எடைப்பிரிவில் மூன்று பிரிவுகளிலும் (ஸ்னாட்ச், கிளீன் மற்றும் ஜெர்க், ஒருங்கிணைந்து) முந்தைய சாதனையை முறியடித்தார். கேலோ விளையாட்டுப் போட்டியில் 20 பிரிவுகளில் 26 புதிய சாதனைகளும், ஒரு தேசிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான 87 கிலோ எடை பிரிவில் ஆன் மரியா, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் தேசிய சாதனையை முறியடித்தார். அவர் 129 கிலோ எடையை தூக்கி, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தேசிய சாம்பியன் ஷிப் போட்டியில் மன்பிரீத் கவுரின் 128 கிலோ சாதனையை முறியடித்தார்.
மார்ச் மாதம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆன் மரியா, மொத்தம் 231 கிலோ எடையைத் தூக்கி தேசிய கூட்டு சாதனையை முறியடித்தார். 101 கிலோ ஸ்னாட்ச் பிரிவில், அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820921
***************
(Release ID: 1820970)
Visitor Counter : 192