தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
முக்கிய துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: காலாண்டு அறிக்கை
Posted On:
28 APR 2022 10:37AM by PIB Chennai
நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு குறித்த அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒரு பகுதியாக, மூன்றாம் காலாண்டுக்கான வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டது.
உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகிய ஒன்பது முக்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் பிரிவில் இந்த ஒன்பது துறைகள் மொத்த வேலைவாய்ப்பில் 85 சதவீதத்திற்கு பொறுப்பாகும்.
* 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
* வேலைவாய்ப்புகளில் உற்பத்தி துறை 39% உடன் முதல் இடத்திலும், கல்வி துறை 22% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
* ஏறக்குறைய அனைத்து (99.4%) நிறுவனங்களும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* சுமார் 23.55% நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வேலையில் பயிற்சி அளித்தன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820803
******
(Release ID: 1820958)
Visitor Counter : 197