வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய இரசாயனப் பொருட்களின் ஏற்றுமதி 2013-14-ம் ஆண்டைக் காட்டிலும் 2021-22-ம் ஆண்டில் 106% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Posted On: 27 APR 2022 3:35PM by PIB Chennai

நாட்டின் இரசாயனப் பொருட்களின் ஏற்றுமதி 2013-14-ம் ஆண்டைக் காட்டிலும்  2021-22-ம் ஆண்டில் 106% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2021-22-ம் ஆண்டிற்கான நாட்டின் இரசாயன ஏற்றுமதி 29296 மில்லியன் அமெரிக்க டாலர்களாக சாதனை படைத்தது. அதேசமயம் 2013-14-ம் ஆண்டில் இந்தியாவின் இரசாயன நாட்டின் 14210 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், இந்த ஏற்றுமதியில் காணப்படும் வளர்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு  உத்வேகம் அளிக்கும் என்று கூறினார்.

கரிம,மற்றும் கனிம இரசாயன வகைகள், வேளாண் இரசாயனங்கள், சாயங்கள் மற்றும் சாய இடைநிலைகள், சிறப்பு இரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பின் காரணமாக இரசாயனங்களின் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டின் இரசாயனத் தொழில் உலகளவில்  முன்னணியில் உள்ளது. "மேக் இன் இந்தியா" திட்டம் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது. உலகில் இரசாயனங்கள் உற்பத்தியில் இந்தியா 6-வது பெரிய நாடாகவும், ஆசியாவில் 3-வது இடத்திலும் உள்ளது. ரசாயனங்கள் ஏற்றுமதியில் இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.

சாய உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளதுஉலகளவில் சாயப்பொருள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 16%-18%-மாக உள்ளது. இந்திய சாய வகைகள்  90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகின் வேளாண் இரசாயன உற்பத்தியில் இந்தியா 4-வது பெரிய நாடாக உள்ளது. 50%-க்கும் அதிகமான தொழில்நுட்ப தரம் வாய்ந்த  பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்தி செய்கிறது.

ஏறக்குறைய 50% வேளாண் இரசாயனங்கள்   இந்தியாவில் இருந்து  ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகிலேயே ஆமணக்கு எண்ணெயின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளதுஆமணக்கு ஏற்றுமதியில் உலகளவில் 85-90% வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அமெரிக்கா, சீனா மற்றும் புதிய சந்தைகளாக உருவாகியுள்ள துருக்கி, ரஷ்யா மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளும் (சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, தைவான், மக்காவோ, மங்கோலியா) உள்ளிட்ட 175-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா இரசாயனங்களை ஏற்றுமதி செய்கிறது.  

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820478

 

*****(Release ID: 1820652) Visitor Counter : 192