பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

இருவாரகால ஊட்டச்சத்து விழா- 2022, நாடு முழுவதும் 3 கோடி செயல்பாடுகளுடன் நடைபெற்றது

Posted On: 26 APR 2022 2:30PM by PIB Chennai

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நான்காவது  இருவாரகால ஊட்டச்சத்து விழாவை  மார்ச் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை கொண்டாடியது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 3 கோடி செயல்பாடுகளைக் கொண்டது. கடந்த 2021-ல் நடைபெற்ற விழாவைக் காட்டிலும் சுமார் 2.21 கோடி நடவடிக்கைகளைக் கொண்டதாக இருந்தது. நாடு முழுவதும்  ஊட்டச்சத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், ஜல் சக்தி அமைச்சகம், பழங்குடியினர் விவகார அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், விவசாயிகள் நலன், கல்வி, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்  சிறுபான்மையினர் நலன், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், வீட்டுவசதிநகர்ப்புற விவகாரங்கள், மற்றும்  தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவை கலந்து கொண்டன. இரு வார கால ஊட்டச்சத்து விழா - 2022, இரண்டு அம்சங்களில் விரிவான கவனம் செலுத்தியது. அவை, பழங்குடியினர் பகுதிகளில் உள்ள பயனாளிகளின் 6 வயது வரையிலான குழந்தைகளின் உயரம், எடை குறித்த அளவீடு, மற்றும் பாலின உணர்திறன், நீர் மேலாண்மை, இரத்த சோகை மற்றும் தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்திற்கான  பாரம்பரிய உணவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகள் அடங்கும்.

இந்த ஆண்டு நடைபெறும் இவ்விழாவின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று, நீர் நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் பெண்களின் பங்கை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஊட்டச்சத்து பஞ்சாயத்துகள் மற்றும் தாய்மார்கள் குழுக்களின்  செயப்பாடுகளின்  உணர்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. நீர் பாதுகாப்பு, மற்றும் நீடித்த பயன்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள மிகவும் பயனுள்ள உத்திகளில் ஒன்று ஆகும். இந்த உத்திகள் அங்கன்வாடி மையங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அங்கன்வாடி மையங்களுக்குச் செல்லும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் அன்றாட வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த யோசனைகளை வழங்குவதில் அங்கன்வாடி பணியாளர்கள் / உதவியாளர்கள், ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820115

 

******



(Release ID: 1820251) Visitor Counter : 126