நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு இடங்களில் 72.50 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளதாக திரு பிரல்ஹத் ஜோஷி கூறியுள்ளார்

Posted On: 23 APR 2022 1:32PM by PIB Chennai

இந்திய நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது 72.50 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனல் மின் நிலையங்களில் 22.01 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உள்ளதாக குறிப்பி்ட்டுள்ளார்.

தினசரி அடிப்படையில் சாதனை அளவாக நிலக்கரி உற்பத்தி செய்யப்படுவதாகவும், நாட்டில் தற்போது போதுமான அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் திரு பிரல்ஹத் ஜோதி தெரிவித்துள்ளார்.

நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த நிதியாண்டில் 777.23 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இது அதன் முந்தைய நிதியாண்டை விட 8.55 சதவீதம் அதிகமாகும் என்று கூறியுள்ளார். இந்திய நிலக்கரி நிறுவனம் கடந்த நிதியாண்டில் 622.64 மில்லியன் டன் அளவிற்கு உற்பத்தி செய்துள்ளதாகவும் இது அதன் முந்தைய நிதியாண்டை விட 4.43 சதவீதம் அதிகமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819232   

***************


(Release ID: 1819292) Visitor Counter : 172