பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு ஏப்ரல் 24 அன்று பிரதமர் ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார்


ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார்

ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களை நெருக்கமாகக் கொண்டுவர உதவுகின்ற பனிஹால் க்வாசிகண்ட் சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்துவைப்பார்

தில்லி - அமிர்தசரஸ் - கோத்ரா விரைவு ப் பாதைக்கான மூன்று சாலைத் திட்டங்களுக்கும் ராட்லே & க்வார் புனல்மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தலை நோக்கமாகக் கொண்ட அம்ரித் சரோவர் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைப்பார்

மும்பைக்கும் செல்லவிருக்கும் பிரதமருக்கு தேசக் கட்டுமானத்தில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததற்கான முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது

Posted On: 23 APR 2022 10:46AM by PIB Chennai

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 2022 ஏப்ரல் 24 அன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார். சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி பஞ்சாயத்துக்கும் அவர் செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது ரூ. 20,000 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். அம்ரித் சரோவர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் பின்னர் மாலை 5 மணி அளவில் மும்பையில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இங்கு அவர் முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதினைப் பெற்றுக் கொள்வார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரதமர்

ரூ 3 ஆயிரத்து 500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையையும் பிரதமர் திறந்து வைப்பார் 8.45 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை வாணி கால் குவாசி கண்டு இடையேயான தூரத்தை 16 கிலோ மீட்டர் அளவுக்கு உழைக்கும் மேலும் பயண நேரமும் சுமார் ஒன்றரை மணி நேரம் குறையும் இது இரட்டை சுரங்கப்பாதை யாகும் ஒன்று இரு வழிகளிலும் பயணம் செய்வதற்கான து இவற்றில் 500 ஒவ்வொரு 100 மீட்டருக்கும் மீட்டர் தூரத்திலும் ஒன்றை ஒன்று கடந்து செல்லும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட சாலைகளாக இருக்கும் பராமரிப்பு மற்றும் அவசரகால வெளியிட்டதற்காக இந்த சுரங்கப்பாதை ஜம்மு விற்கும் காஷ்மீருக்கும் இடையேயான இடையே அனைத்து பருவத்திலும் தொடர்பை ஏற்படுத்த உதவும் இந்த இரண்டு பகுதிகளையும் நெருக்கமாக கொண்டு வரும்

ரூ 7,500 கோடி செலவில் கட்டப்படவுள்ள தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா என மூன்று விரைவுசாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இவை தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா ஆறுவழி விரைவுப்
பாதைக்கான நான்கு வழிப் பாதை இணைப்பாக இருக்கும்
தேசிய நெடுஞ்சாலை 44ல் உள்ள பல்சுவாவிலிருந்து குர்ஹா பைல்தரன், ஹிராநகர்; குர்ஹா பைல்தரன், ஹிராநகரிலிருந்து ஜாக், விஜய்பூர்; ஜாக், விஜய்பூரிலிருந்து குஞ்வினி, ஜம்மு என இருக்கும் இந்தப் பாதை ஜம்மு விமானநிலையத்தை இணைக்கும்.

ராட்லே மற்றும் க்வார் புனல் மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். கிஷ்த்வார் மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ. 5,300 கோடி செலவில் 850 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட ராட்லே புனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ. 4,500 கோடி செலவில் 540 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட க்வார் புனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் மின் தேவைகளை எதிர்கொள்ள இந்த இரு திட்டங்களும் உதவும்.

பாலியில் 500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதலாவது பஞ்சாயத்தாக இது மாறியிருக்கிறது.

ஸ்வமிதா அட்டைகளைப் பயனாளிகளுக்குப் பிரதமர் வழங்கவிருக்கிறார். பல்வேறு வகைகளில் சாதனைகள் புரிந்ததற்கு விருதுகளை வென்றுள்ள பஞ்சாயத்துகளுக்குப் பரிசுத் தொகையை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று அவர் பரிவர்த்தனை செய்துவைப்பார். இந்தப் பகுதியின் கிராமப்புற பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இன்டாக் புகைப்பட காட்சிக் கூடத்திற்கும் செல்லவிருக்கும் பிரதமர், ஊரகத் தொழில்துறை அடிப்படையில் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கியா ஸ்மார்ட்பூருக்கும் செல்வார்.

அமிர்த சரோவர்

நீர்நிலைகள் புனரமைப்பு செய்யப்படுவதை உறுதி செய்யும் விதமாக ஜம்மு-காஷ்மீர் பயணத்தின்போது அமிர்த சரோவர் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தல் என்பதை இது நோக்கமாகக் கொண்டது. இது சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை நோக்கிய அரசின் மற்றொரு சிறப்பு திட்டமாகும்.

மும்பையில் பிற்பகல் ஐந்து மணி அளவில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு முதலாவது லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படும். பாரதரத்னா லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்டுள்ள இந்த விருது தேசக் கட்டுமானத்திற்கு தலைசிறந்த பங்களிப்பு செய்த தனி நபர் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழங்கப்படும்.

***************


(Release ID: 1819267) Visitor Counter : 205