தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நோய்த்தீர்க்கும் முறைகளுக்கு உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்
Posted On:
22 APR 2022 6:53PM by PIB Chennai
உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு 2022-ன் நிறைவு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று கலந்து கொண்டார்.
மூன்று நாள் உச்சிமாநாட்டின் பங்கேற்பாளர்களிடம் பேசிய திரு தாக்கூர், நோய்த்தீர்க்கும் முறைகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும் என்று கூறினார்.
ஆயுஷ் துறையில் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அபரிமிதமான சாத்தியக்கூறுகள் குறித்து பேசிய அமைச்சர், 2014-ல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருந்த வர்த்தகம் இன்று 6 மடங்கு அதிகரித்து 18 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்றார். இத்துறையில் அபரிமிதமான வளர்ச்சிக்கான சாத்தியத்தை இது குறிக்கிறது.
மேலும் பேசிய அமைச்சர், 75% என்ற அற்புதமான வருடாந்திர வளர்ச்சி விகிதம் இதை ஒரு கவர்ச்சிகரமான துறையாக மாற்றுகிறது. இந்தத் துறையில் முதலீடு செய்யும் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்களை நாடு விரைவில் காணும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொவிட் பெருந்தொற்றின் போது இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதாகவும், கொவிட்டுக்கு பிந்தைய உலகில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதாகவும், இந்த வளர்ச்சியில் ஆயுஷ் ஒரு முன்னணி துறையாக இருக்க விரும்புவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
உலகமே கொவிட் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 47 இந்திய ஸ்டார்ட்அப்கள் யூனிகார்ன்களாக மாறியுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819089
***************
(Release ID: 1819106)