ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கங்கா குவெஸ்ட் 2022, ஒரு ஆன்லைன் வினாடி வினா போட்டி, 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்பு

Posted On: 21 APR 2022 2:23PM by PIB Chennai

பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில், நமாமி கங்கை திட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடன், மாணவர்களின் சிறப்புக் கவனத்துடன், தேசிய தூய்மை கங்கை  இயக்கம் (NMCG), ட்ரீ கிரேஸ் அறக்கட்டளையும்  இணைந்து, கங்கா குவெஸ்ட் என்ற ஆன்லைன் வினாடி வினா போட்டியை கடந்த 2019-ம் ஆண்டில் தொடங்கியது.

இந்த ஆண்டு, கங்கா குவெஸ்ட் 2022 வினாடி வினா போட்டி ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதுவரை ஆன்லைன் வினாடிவினா போட்டியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், குறிப்பாக குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். வினாடி வினா போட்டிக்கான கடைசி தேதி மே 22-ம் தேதி  ஆகும். இது உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜூன் 5, 2022 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேரடி வினாடி வினா போட்டியுடன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். கங்கா குவெஸ்டை www.clap4ganga.com என்ற இணையத்தளத்தின் மூலமும் பங்கேற்கலாம்.

கங்கா குவெஸ்ட் 2022-ம் ஆண்டிற்கான  பதிவுகள் மார்ச் 22-ம் தேதி, உலக நீர் தினத்தையொட்டி தொடங்கியது. கங்கா குவெஸ்ட் 2022 வினாடி வீணாய் போட்டிக்கான  நான்கு கருப்பொருட்கள்: அர்த்த கங்கா மற்றும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ், இயற்பியல் புவியியல் மற்றும் பிரபலமான இடங்கள் மற்றும் நபர்கள், நடப்பு நிகழ்வுகள் மற்றும் நிர்வாகம், தாவரங்கள்,  விலங்கினங்கள் மற்றும் மாசு/நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள். முதல் பரிசு பெறுபவர்களுக்கு மடிக்கணினியும், 2வது மற்றும் 3வது பரிசு பெற்றவர்களுக்கு முறையே டேப்லெட் அல்லது கிண்டில் வழங்கப்படும்.

வினாடி வினா அமைப்பு 10 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும், குறிப்பாக, மாணவ, மாணவியர் பங்கேற்கும் வகையில் மூன்று பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது: தரம்-I: வகுப்பு VIII வரை, தரம் II: வகுப்பு IX-XII மற்றும் தரம் III: பெரியவர்கள்/பல்கலைக்கழகம்/நிறுவனங்கள்/மூத்த குடிமக்கள். வினாடி வினா போட்டியில் அறிவை வளர்ப்பது,  அறிவை மதிப்பிடும் வகையிலான  கேள்விகள் மற்றும் குறுகிய கணக்கெடுப்பு உள்ளிட்ட மூன்று சுற்றுகள் உள்ளன. நமாமி கங்கேவின் ஒரு முயற்சியாக தொடர் கற்றல் மற்றும் செயல்பாட்டுக்கான இணையத்தளம் (CLAP) என்பது  ட்ரீ கிரேஸ் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இது நாட்டில்  உள்ள நதிகளின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான குறித்த கலந்துரையாடல்களும் இந்த இணையத்தளத்தின் பணிகளாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818660

***************


(Release ID: 1818733) Visitor Counter : 255