பாதுகாப்பு அமைச்சகம்
2021-22 ஆம் நிதியாண்டில் உள்நாட்டு கொள்முதல் குறித்த முதலீட்டு கையகப்படுத்துதல் பட்ஜெட்டில் 65.50 சதவீதத்தை பாதுகாப்பு அமைச்சகம் பயன்படுத்தி உள்ளது
Posted On:
20 APR 2022 9:32AM by PIB Chennai
2021-22 ஆம் நிதியாண்டில் உள்நாட்டு தொழிலுக்காக, முதலீட்டு கையகப்படுத்துதல் பட்ஜெட்டுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் 64 சதவீதத்தை ஒதுக்கியிருந்தது. 2021-22 நிதியாண்டின் கடைசியில் பாதுகாப்பு அமைச்சகம் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கை எட்டும் வகையில், இந்த இலக்கை எஞ்சி 65.50 சதவீதத்தை உள்நாட்டு கொள்முதலில் பயன்படுத்தியுள்ளது. மேலும் 2021-22 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்தால் 99.5 சதவீதத்தையே பயன்படுத்த முடிந்துள்ளது என 2022 மார்ச் மாதத்தில் பூர்வாங்க செலவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
***************
(Release ID: 1818229)
(Release ID: 1818290)
Visitor Counter : 246