நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரபி பருவத்தில், 2022-23-ம் ஆண்டில், கோதுமை கொள்முதல் செய்யும் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டது

குறைந்தபட்ச ஆதரவு விலையாக 13,951.41 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை கொள்முதல் மூலம் இதுவரை 5.86 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

प्रविष्टि तिथि: 18 APR 2022 3:50PM by PIB Chennai

மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ரபி பருவத்தில் 2022-23-ம் ஆண்டின் கோதுமை கொள்முதல் அண்மையில் தொடங்கியது. 17.04.2022-ம் தேதி வரை 69.24 லட்சம் மெட்ரிக் டன் அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு 5.86 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 13951.41 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டில் காரிஃப்  பருவத்தில் (KMS) விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் சீராக நடந்து வருகிறது.

காரிஃப் பருவத்தில் 2021-22-ம் ஆண்டில் 17.04.2022-ம் தேதி வரை கொள்முதல் செய்யும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து 754.08 லட்சம் மெட்ரிக் டன்  நெல் (காரிஃப் பயிர் 750.95 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் ராபி பயிர் 3.14 லட்சம் மெட்ரிக் டன் அடங்கும்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 108.90 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 1,47,800.28 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ரபி பருவத்தில் 2022-23-ம் ஆண்டில்  (17.04.2022 வரை) மாநில வாரியாக கோதுமை கொள்முதல் குறித்த விவரங்கள்

18.04.2022 தேதியின்படி;

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817758

***************


(रिलीज़ आईडी: 1817836) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi