சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
‘‘ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் மற்றொரு மைல்கல் சாதனை படைத்துள்ளது- ஒரே நாளில் மிக அதிக அளவில் தொலைமருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன’’
இடுகை இடப்பட்ட நாள்:
17 APR 2022 7:23PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில், ஏப்ரல் 16-ந்தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான தொலை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுள்ளன. இதுதான் இதுவரை வழங்கப்பட்ட ஆலோசனைகளில் மிக அதிகபட்சமானதாகும். இதில் முந்தைய சாதனை ஒரே நாளில் 1.8 லட்சம் ஆலோசனைகள் பெறப்பட்டதுதான். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையின் கீழ், ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் நான்காவது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் தொலைமருத்துவ ஆலோசனைகள் பெறப்படுகின்றன. ஏழை எளிய மக்களும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். மிகப்பெரிய நாடான இந்தியாவில் தொலைதூர கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் இந்த மருத்துவ ஆலோசனை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1817605)
வருகையாளர் எண்ணிக்கை : 287