பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு.நரேந்திர மோடி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் திரு.என்குவென் பு ட்ராங் உடன் தொலைபேசி வாயிலாக உரையாடல்
Posted On:
15 APR 2022 3:36PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று (15.4.2022) வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் திரு.என்குவென் பு ட்ராங்-ஐ தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு உரையாடினார்.
இந்தியா – வியட்நாம் இடையே தூதரக உறவு ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடுவதையொட்டி, இரு தலைவர்களும், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 2016-ல் பிரதமர் வியட்நாம் சென்றபோது, இந்தியா – வியட்நாம் இடையே ஏற்படுத்தப்பட்ட விரிவான ராணுவ ஒத்துழைப்பின்கீழ், பல்வேறு ஒத்துழைப்புகளும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது குறித்தும் மனநிறைவு தெரிவித்தனர்.
இந்தியாவின் கிழக்கை உற்று நோக்குங்கள் கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குத் திட்டத்தில் வியட்நாம் முக்கியத் தூணாக திகழ்வதை சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இருதரப்பு முன்முயற்சிகளை விரைவுபடுத்தப் பாடுபடுவதுடன், இருதரப்பு நட்புறவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் மருந்து மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு வியட்நாமில் சந்தைப்படுத்துவதற்கான மேலும் வசதி செய்யுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இரு நாடுகளிடையேயான வரலாற்று மற்றும் நாகரீக ரீதியான பிணைப்புகளை சுட்டிக்காட்டிய பிரதமர், வியட்நாமில் சாம் நினைவுச் சின்னத்தை மீட்டுருவாக்கியதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இரு நாடுகளிடையேயான ராணுவ ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
உக்ரைன் நிலவரம் மற்றும் தெற்கு சீன கடல் பிரச்சினை உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
*****
(Release ID: 1817083)
Visitor Counter : 191
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam