எஃகுத்துறை அமைச்சகம்

80-வது ஸ்கோச் உச்சிமாநாடு 2022-ல் இரண்டு விருதுகளை என்எம்டிசி வென்றது

Posted On: 12 APR 2022 1:12PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான, எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி), சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற 80-வது ஸ்கோச் உச்சிமாநாட்டில் 2022-ல் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என இரண்டு விருதுகளை வென்றது.

‘வங்கியியல், நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறை & பொதுத்துறை நிறுவனங்கள்’ என்பது 80-வது ஸ்கோச் உச்சிமாநாடு 2022-ன் கருப்பொருள் ஆகும்.

என்எம்டிசி ஐடிஐ பன்சி மூலம் தண்டேவாடா மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஊக்குவிப்புத் திட்டத்திற்காக சமூகப் பொறுப்பு பிரிவில் தங்க விருதையும், ஈஆர்பி செயல்படுத்தலுக்கான ‘கல்பதரு’ திட்டத்திற்காக டிஜிட்டல் சேர்க்கை பிரிவில் வெள்ளி விருதையும் என்எம்டிசி வென்றது. நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சுமித் தேப் சார்பாக இயக்குநர் (நிதி) திரு அமிதவ முகர்ஜி விருதுகளை காணொலி முறையில் பெற்றுக்கொண்டார்.

சாதனைக்காக குழுவினரை வாழ்த்திய திரு சுமித் தேப், “தேசத்திற்கு சேவை செய்வதில் என்எம்டிசியின் முயற்சிகளை அங்கீகரித்ததற்காக ஸ்கோச்க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815940

***************



(Release ID: 1816087) Visitor Counter : 164