பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா – அமெரிக்கா இடையே 2 + 2 அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் செய்தியாளர்கள் சந்திப்பு
प्रविष्टि तिथि:
12 APR 2022 9:17AM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் செய்தியாளர்கள் சந்திப்பு: செயலாளர் பிளின்கென், செயலாளர் ஆஸ்டின், டாக்டர் ஜெய்சங்கர், ஊடகவியலாளர்கள், ஆகியோருக்கு வணக்கம்.
செயலாளர்களின் ஈடுபாடு அவர்களின் ஊழியர்களது சிறப்பான கலந்துரையாடல் இன்முகத்துடனான, விருந்தளிப்பு, ஆகியவற்றுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது இருதரப்பு உறவுகளுக்கு அவர்கள் உறுதிபூண்டிருப்பதை நான் வெகுவாக பாராட்டுகிறேன்.
இன்று நாங்கள் மிகவும் அர்த்தமுள்ள, ஆழமான விவாதங்களை நடத்தினோம். இது இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை பராமரிக்கவும், நமது பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் உதவும்.
நாங்கள், இருதரப்பு, பாதுகாப்பு மற்றும் உலக விஷயங்கள் பற்றி விவாதித்தோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகிய நாங்கள், பெரும்பாலானவற்றில், ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டிருப்பது நெகிழ்வாக இருந்தது. சுதந்திரமான, வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய விதிகள் அடிப்படையில், இந்தியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கண்ணோட்டத்தை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்தப் பகுதிகளில் அமைதி, நிலைத்தன்மை, வளம், ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமானது எங்களின் உறவுகள்.
பாதுகாப்புக் கணினி, சிறப்புப் படைகள், ராணுவங்களுக்கு இடையே, கூட்டுப் பயிற்சிகள், சரக்குப் போக்குவரத்தில் ஒத்துழைப்பை விரிவாக்குதல், ஆகியவற்றில் மேலும், ஒத்துழைப்பதற்கான வழிகளைக் காண நாங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறோம். பாதுகாப்பு, தொழில்நுட்பத்தையும், வர்த்தக முயற்சிகளையும், வலுப்படுத்துவதன் அவசியத்தை இருதரப்பினரும், ஏற்றுக் கொண்டுள்ளோம்.
இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவ பாதுகாப்பு ஈடுபாட்டை வலுப்படுத்த இன்றைய 2 + 2 சந்திப்பு முக்கியமானதாகும். அடுத்த 2 + 2 அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்திற்கு பரஸ்பரம் வசதியான நேரத்தில் அமெரிக்காவின் இரண்டு செயலாளர்களை இந்தியாவுக்கு நாங்கள் வரவேற்கிறோம் எனத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815838
*********
(रिलीज़ आईडी: 1816020)
आगंतुक पटल : 279