பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் [NCPCR] ஏப்ரல் 11 முதல் மே 31, 2022 வரை தேர்வுத் திருவிழா 4.0-ஐ கொண்டாட உள்ளது

Posted On: 10 APR 2022 5:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் “தேர்வு குறித்த ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் உத்வேகம் பெற்று, தேர்வுகளை மகிழ்ச்சியான செயலாக மாற்றுவதற்கான தனது முயற்சியைத் தொடர்ந்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஏப்ரல் 11, 2022 முதல் 31 மே, 2022 வரை தேர்வுத் திருவிழா- 4.0-ஐ கொண்டாடுகிறது.  2019-ம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது பிரச்சாரமான 'தேர்வுத் திருவிழா' மூலம் தேர்வுகளைக் கொண்டாடி வருகிறது.  இது தேர்வு மன அழுத்தத்தைப் பற்றிய குழந்தைகளின் பார்வையை மாற்றவும், தேர்வு முடிவுகளுக்கு முன் அவர்களின் கவலையை களையும் வகையிலும் திட்டமிட்டுள்ளது.

தேர்வுத் திருவிழா 4.0 என்பது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் மற்றும் முக்கிய உதவிக்குறிப்புகளைப் பெறவும் ஒரு தளத்தை வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும். மன அழுத்தம் நிறைந்த காலங்களில், கடினமான மற்றும் குழப்பமான எண்ணங்களைப் பற்றி பேசுவதும் பகிர்ந்து கொள்வதும் மாணவர்களின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் பெருமளவு குறைக்க உதவும்.

இந்த ஆண்டு, குழந்தைகள் தவிர, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை சென்றடையும் நோக்கில்  பல்முனை அணுகுமுறை பின்பற்றப்படும். தேர்வுத் திருவிழா 4.0 பின்வரும் செயல்பாடுகளை உள்ளடக்கும்:

I)    ,2022-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி  முதல் மே 31,  வரை முகநூல், ட்விட்டர், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் யூடியூப் மற்றும் தூர்தர்ஷன் நேஷனல் மற்றும் நியூ இந்தியா ஜங்ஷனின் யூடியூப் ஆகியவற்றில் மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு முன் அவர்களின் மன அழுத்தத்தையும் கவலைகளையும் குறைக்க நேரடி ஒளிபரப்பு அமர்வுகள் மூலம் வல்லுனர்களுடன் தொடர்பு கொள்ள உதவும்.

II)   SAMVEDNA- (1800-121-2830) என்பது கோவிட் தொடர்பான மன அழுத்தத்திற்கான பயிற்சி பெற்ற ஆலோசகர்களால்தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்  கட்டணமில்லா தொலைத்தொடர்பு சேவையாகும். மாணவர்கள் தேர்வு மற்றும் முடிவுகள் தொடர்பான கேள்விகள், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில் இந்த சேவை நீட்டிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815430

****



(Release ID: 1815441) Visitor Counter : 270