குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்பாடு செய்திருந்த மத்தியஸ்தம் மற்றும் தகவல்தொழில்நுட்பம் தொடர்பான தேசிய நீதித்துறை மாநாட்டை குடியரசு தலைவர் தொடங்கிவைத்தார்

प्रविष्टि तिथि: 09 APR 2022 4:50PM by PIB Chennai

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் அம்மாநில உயர்நீதிமன்றம் ஏற்பாடு செய்திருந்த மத்தியஸ்தம் மற்றும் தகவல்தொழில்நுட்பம் தொடர்பான  தேசிய நீதித்துறை இரண்டு நாள் மாநாட்டை குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 20 வருடங்களாகவே மத்தியஸ்தம் முறையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை அனைத்து தரப்பினரும் ஏற்று கொண்டுள்ளதாக தெரிவித்தார்.  எந்தவித உத்தரவுக்கும் இணங்காமல் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்பு கொள்ளும் வகையில் மத்தியஸ்த முறை ஊக்கப்படுத்துவதாக கூறினார். மத்தியஸ்த முறையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டால் நீதிமன்றத்திற்கான கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் அனைத்துத்தரப்பினரும் வெற்றியாளர்கள் என்று அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் மத்தியஸ்த முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார். சில இடங்களில் போதுமான பயிற்சி பெற்ற மத்தியஸ்தர்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.  மத்தியஸ்த மையங்களின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.  மாநிலங்களின் பயிற்சி திட்டங்களை அமைப்பதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் மத்தியஸ்த மற்றும் சமரச திட்டக்குழு சிறந்த பணிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து குறிப்பிட்ட குடியரசு தலைவர், கொவிட் பெருந்தொற்றுக்கு முன்னதாக கூட தகவல் தொழில்நுட்பம் முறையால் நீதி வழங்கும் முறை சிறப்பாக இருந்ததாகவும், இதன் மூலம் அதிகப்படியான தரமான சேவைகள் வழக்கறிஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

***********


(रिलीज़ आईडी: 1815234) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati