சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையக் கூட்டம் முதல்முறையாக தலைநகருக்கு வெளியே அருணாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்றது

Posted On: 09 APR 2022 3:24PM by PIB Chennai

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 20-வது கூட்டம் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள பாக்கே புலிகள் சரணாலயத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில்  இன்று நடைபெற்றது. முதல் முறையாக தலைநகருக்கு வெளியே இக் கூட்டம் நடைபெற்றது. 

 அப்போது பேசிய அமைச்சர், நாடு முழுவதும் உள்ள புலிகள் சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.  அதே நேரத்தில் காடுகளை சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

காடுகள் மற்றும் புலிகள் சரணாலய வளர்ச்சிக்கு உள்ளூர் மக்கள் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். பல்வேறு விவகாரங்களை எதிர்கொள்ளும்  வனத்துறை அதிகாரிகள், உள்ளூர் கிராமத்தினர், நிபுணர்கள், மாணவர்கள் உள்பட அனைத்துத்தரப்பினருடனும்  பேச்சு நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் கிராமத்தினர் தங்களது ஏர்கன் வகையிலான சுமார் நூறு துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். இவ்வகை துப்பாக்கிகள் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏர்கன் ஒப்படைப்பு இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து பெரும்பான்மையோர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815188

**********


(Release ID: 1815207) Visitor Counter : 238