வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஏற்றுமதி வளம் உள்ள 50 வேளாண் பொருட்களுக்கு மத்திய அரசு அமைப்பை உருவாக்கியுள்ளது

Posted On: 09 APR 2022 12:40PM by PIB Chennai

இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 2021-22-ல் 50 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது. பெருந்தொற்று ஏற்படுத்திய சவால்களுக்கு இடையிலும் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதனிடப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ( ஏபிஇடிஏ) வேளாண் மற்றும் பதனிடப்பட்ட உணவுப்பொருட்களை 25.6 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து வரலாறு படைத்துள்ளது. இது இந்தியாவின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 51 சதவீதமாகும்.

மேலும் இந்த ஆணையம் 23.7 பில்லியன் டாலர் என்ற இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படைக்கப்பட்டுள்ள இந்த சாதனை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் தொலைநோக்கை நோக்கிய நடவடிக்கையாகும்.

அரிசி, பால் பண்ணைப் பொருட்கள், உணவு தானியங்கள், பருப்பு வகைகள், கோதுமை, காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைப் பொருட்கள், முந்திரி, பதனிடப்பட்ட இறைச்சி வகை உள்ளிட்ட வேளாண் பொருட்கள் மற்றும் அதனுடன் சார்ந்த பொருட்கள் அதிகபட்சமாக பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், அமெரிக்கா, நேபாளம், மலேசியா, சவூதி அரேபியா, இந்தோனேசியா, ஈரான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஏற்றுமதிக்கு மிகவும் அதிக வாய்ப்புள்ள மேலும் 50 வேளாண் பொருட்களுக்கு மத்திய அரசு அமைப்பை உருவாக்கியுள்ளதாக ( ஏபிஇடிஏ தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து கூறியுள்ளார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815164

*************



(Release ID: 1815173) Visitor Counter : 258