வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
குப்பையில்லா நகரம் என்னும் குறிக்கோள்
குஜராத்தின் ரூ.403.77 கோடி மரபுவழி கழிவுகளை அகற்றும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
Posted On:
09 APR 2022 10:52AM by PIB Chennai
குப்பையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதே தூய்மை இந்தியா நகர்ப்புற திட்டம் 2.0–வின் குறிக்கோளாகும்- நரேந்திர மோடி, பிரதமர்
இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள குஜராத் மாநிலம், பரப்பளவில் ஐந்தாவது பெரிய மாநிலமாக உள்ளதுடன், அதன் கலாச்சாரம், பாரம்பரியத்துக்கு பெயர்பெற்ற மாநிலமாகும்,
நாட்டின் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான குஜராத், மரபு வழி கழிவு மேலாண்மையில் சவால்களை எதிர்கொண்டது. நாள்தோறும், மாநிலத்தின் 79,000 நகர்ப்புற பகுதிகளில் இருந்து, 1.48 லட்சம் டன் கழிவு சேகரிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு இடையே, கழிவு மேலாண்மை பெரும் சவாலாக இருந்தது. நகர்ப்புற இந்தியா நாளொன்றுக்கு 1.5 லட்சம் டன் திடக்கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இந்தக்கழிவுகளை முறையாக பிரித்து, மேலாண்மை செய்வதே தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம் 2.0 -வின் நோக்கமாகும். இந்த திட்டம் 2021-ம் ஆண்டு அக்டோபர் 1-ம்தேதி பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம் 2.0 -வின் கீழ், ரூ.403.77 கோடி மரபுவழி கழிவுகளை அகற்றும் திட்டத்தை குஜராத் மாநிலம் வகுத்தது.
குஜராத்தில் குப்பை கொட்டப்பட்டதால் மோசமடைந்த நிலப்பகுதிகளை மீட்கும் இத்திட்டத்திற்கு , மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், மத்திய அரசின் பங்காக ரூ.144.85 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள 148 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 19 லட்சம் மெட்ரிக் டன் குப்பை கொட்டப்பட்டு பாழான 806 ஏக்கர் பரப்பு நிலத்தை மீட்க இது வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815127
***************
(Release ID: 1815168)
Visitor Counter : 283