கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவு கொள்கை குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு புதுதில்லியில் ஏப்ரல் 12, 13 தேதிகளில் நடைபெறுகிறது

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மாநாட்டை தொடங்கி வைப்பார்

Posted On: 08 APR 2022 5:30PM by PIB Chennai

கூட்டுறவு கொள்கை குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு புதுதில்லியில் ஏப்ரல் 12, 13 தேதிகளில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மாநாட்டை தொடங்கி வைப்பார். கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் திரு பி எல் வர்மாவும், கலந்து கொள்வார்.

இந்த மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், கூட்டுறவு அமைப்புகளின் பதிவாளர் சுமார் 40 கூட்டுறவு அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.

  1. தற்போதுள்ள சட்ட கட்டமைப்பு, ஒழுங்குமுறை கொள்கையை  அடையாளம் காணுதல், செயல்பாட்டுக்கான தடைகள், அவற்றை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள்…..
  2. கூட்டுறவு கோட்பாடுகள், உறுப்பினர் பங்கேற்பை அதிகப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, முறையான தேர்தல், கணக்கு பராமரித்தல் மற்றும்  தணிக்கை செய்தல்….
  3. அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சமபங்கு அடிப்படையை  உறுதி செய்தல் புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப ஏற்பு, ஏற்றுமதிகள்…..
  4. தொழில் முனைவோருடன் பயிற்சியை இணைத்தல், பெண்கள், இளைஞர்கள், நலிந்த பிரிவினரை இணைத்தல், அனுபவ பகிர்வு…
  5. புதிய கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்துதல், செயல்படாதவற்றை செயல்பட தயார் செய்தல், நீடித்த வளர்ச்சிக்கு கூட்டுறவுகளை மேம்படுத்துதல்,…
  6. சமூகக் கூட்டுறவுகளை மேம்படுத்துதல், சமூகப் பாதுகாப்பில் கூட்டுறவுகளின் பங்கு என ஆறு தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதல்படி, முதன் முறையாக இத்தகைய மாநாடு நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814894

***************


(Release ID: 1815014) Visitor Counter : 251