கலாசாரத்துறை அமைச்சகம்

புதுதில்லி விஞ்ஞான்பவனில் ஏப்ரல் 9 அன்று சங்கீத நாடக அகாடமி விருதுகளையும், லலித் கலா அகாடமி விருதுகளையும் குடியரசு துணைத்தலைவர் வழங்கவிருக்கிறார்

Posted On: 08 APR 2022 4:01PM by PIB Chennai

2018-ஆம் ஆண்டுக்கு சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகள், 44 தலைசிறந்த கலைஞர்களுக்கு (4 ஃபெல்லோஷிப் 40 விருதுகள்) வழங்கப்பட உள்ளன.  மேலும்,  லலித் கலா அகாடமி, ஃபெல்லோஷிப் மற்றும் தேசிய விருதுகள்  23 கலைஞர்களுக்கு (3 ஃபெல்லோஷிப் 20 விருதுகள்) வழங்கப்பட உள்ளன. இவற்றை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏப்ரல் 9 அன்று காலை 11 மணிக்கு வழங்குவார். 

திரு ஜாகீ்ர் உசேன், திரு ஜதின் கோஸ்வாமி, டாக்டர் சோனால் மான்சிங், திரு திருவிடைமருது, குப்பையா கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு நிகழ்த்துக்கலைத் துறையில் தலைசிறந்த  பங்களிப்பு செய்ததற்காக சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது. லலித் கலா அகாடமியின் கவுரமிக்க ஃபெல்லோஷிப், தலைசிறந்த கலைஞர்களான திரு ஹிம்மத் ஷா, திரு ஜோதிபட், திரு ஷ்யாம் சர்மா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

62-வது தேசிய கலைக்கண்காட்சியை கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, புதுதில்லியில் உள்ள லலித்கலா அகாடமி காட்சிக் கூடத்தில் ஏப்ரல் 9 அன்று தொடங்கி வைப்பார். இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி கலந்து கொள்வார்.

விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து ஏப்ரல் 9 முதல் 19 வரை புதுதில்லியில் உள்ள  காமனி கலையரங்கம், ரவீந்திர பவனில் உள்ள மேகதூத் வளாகம் ஆகியவற்றில் நிகழ்த்துக்கலைகளின் விழா நடத்தப்பட உள்ளது.  இதனை கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி ஆகியோர் காமனி கலையரங்கில் ஏப்ரல் 9 அன்று தொடங்கி வைப்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814830



(Release ID: 1814913) Visitor Counter : 131