நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
எத்தனால் திட்டங்களை முடிப்பதற்கும் கடன் வழங்குவதற்குமான காலவரம்பை மத்திய அரசு நீட்டித்துள்ளது
Posted On:
05 APR 2022 6:13PM by PIB Chennai
2025-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதை எட்டுவதற்கு 1,700 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி தேவைப்படுகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கு வசதியாக எத்தனால் திட்டங்களை முடிப்பதற்கும் கடன் வழங்குவதற்குமான காலவரம்பை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஏற்கனவே எத்தனால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை 2022 மார்ச் / ஏப்ரல் மாதங்கள் வரை மத்திய அரசு நீடித்திருந்தது. இருப்பினும், கொவிட் -19 காரணமாக ஏற்பட்ட தவிர்க்க முடியாத, துரதிருஷ்டவசமான சூழலால் வங்கிகளும், இதர நிதி நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் வழங்க இயலவில்லை.
இதையடுத்து தற்போது எத்தனால் உற்பத்தி செய்யும் திட்டங்களை முடிப்பதற்கும் கடன் வழங்குவதற்குமான காலத்தை 2022 செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வேளாண் பொருளாதாரத்திற்கு ஊக்கமளித்தல், இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலிய பொருட்களை நம்பியிருப்பதை குறைத்தல், கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் அந்நியசெலாவணியை சேமித்தல், காற்று மாசினைக் குறைத்தல், ஆகியவற்றுக்காக 2022 வாக்கில் 10 சதவீத அளவுக்கும், 2025 வாக்கில் 20 சதவீத அளவுக்கும் பெட்ரோலுடன் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813801
***************
(Release ID: 1813838)
Visitor Counter : 199