இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
615 பயிற்சியாளர்கள் நியமன அடிப்படையிலும், 416 பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் / அயல்பணி அடிப்படையிலும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணிபுரிகிறார்கள்: திரு அனுராக் தாக்கூர்
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2022 4:47PM by PIB Chennai
615 பயிற்சியாளர்கள் நியமன அடிப்படையிலும், 416 பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் / அயல்பணி அடிப்படையிலும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணிபுரிகிறார்கள் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர், 2024 மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகள் உட்பட முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் தயார்படுத்துவதற்கு முழுமையான ஆதரவளிக்கும் முயற்சிகளின் விளைவாக இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் 3 பயிற்சி மையங்களில் 18 பயிற்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1813816)
வருகையாளர் எண்ணிக்கை : 197