உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 05 APR 2022 3:08PM by PIB Chennai

புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுகள் நிவாரண நடவடிக்கைகளை மாநிலப் பேரிடர்  நிவாரண நிதியிலிருந்து மேற்கொள்கின்றன. கூடுதலான நிதியுதவி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், 2021-22 நிதியாண்டில் (31.03.2022 நிலவரப்படி) தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகம், ஆந்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி பற்றிய விவரவங்களை மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த ராய் வெளியிட்டார்.

இதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.566.36 கோடி வெள்ள  நிவாரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813628

-----


(रिलीज़ आईडी: 1813695) आगंतुक पटल : 320
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali , Gujarati , Odia , Telugu