வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வீட்டு வசதி & நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் – நகர்ப்புறம் திட்டத்திற்கான மத்திய அனுமதிக்கும் & கண்காணிப்புக் குழுவின் 60-வது கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2022 10:16AM by PIB Chennai

மத்திய வீட்டு வசதி & நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் திரு மனோஜ் ஜோஷி தலைமையில் நடைபெற்ற பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் – நகர்ப்புறம் திட்டத்திற்கான மத்திய அனுமதிக்கும் & கண்காணிப்புக் குழுவின் 60-வது கூட்டத்தில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (நகர்ப்புறம்)-ன்கீழ், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கூடுதலாக 2.42 லட்சம் வீடுகள் கட்டும் விதமாக இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  பயனாளிகளே கட்டுமானப் பணிகளுக்கு பொறுப்பேற்று ஒத்துழைப்புடன் குறைந்த செலவில், குடிசைப்பகுதி மறுவாழ்வுத் திட்டமாக, இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

கூட்டத்தின் தொடக்கத்தில், இந்த ஆறு மாநிலங்களிலும் கட்டுமானப் பணிகள் தொடர்பாக பிரச்சினைகள் குறித்து, செயலாளர் திரு மனோஜ் ஜோஷி ஆலோசனை நடத்தினார்.  திட்டங்களில் மாற்றம் செய்வது மற்றும் பங்கேற்பு மாநிலங்களின் செயல்திறன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.  இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட 117.9 லட்சம் வீடுகளில் 95.2 லட்சம் வீடுகளில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 56.3 லட்சம் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. 

ரூ.7.70 லட்சம் கோடி மொத்த முதலீட்டிலான இத்திட்டத்திற்கு மத்திய உதவியாக ரூ.1.96 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.  இதில் ரூ.1.18 லட்சம் கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811754

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1811946) வருகையாளர் எண்ணிக்கை : 359
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Gujarati , Telugu