கனரகத் தொழில்கள் அமைச்சகம்
குறைக்கடத்தி (செமி கண்டக்டர் சிப்) சில்லுகளின் விநியோகத்தை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
Posted On:
29 MAR 2022 12:45PM by PIB Chennai
குறைக்கடத்தி சில்லுகளின் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. பின்வரும் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:
i) காலியம் நைட்ரைடு சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்துதல் மையம் மற்றும் உயர் சக்தி அதிர்வெண் எலக்ட்ரானிக்ஸ் இன்குபேட்டரை நிறுவுதல்.
ii) உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் NAND Flash நினைவகத்தின் அசெம்பிளி, சோதனை, குறியிடுதல் மற்றும் பேக்கேஜிங் (ATMP) அமைப்பதற்கான திட்டம்.
iii) டிரான்சிஸ்டர்கள், டையோடு போன்ற தனித்த குறைக்கடத்தி சாதனங்களுக்கான திட்டம் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் (பிஎல்ஐ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
iv) எலக்ட்ரானிக் கூறுகள் மற்றும் குறைக்கடத்திகள் (SPECS) உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நிதி ஊக்கத்தொகை.
மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் ஸ்ரீ கிரிஷன் பால் குர்ஜார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1810822
***************
(Release ID: 1811024)
Visitor Counter : 237