உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சிவில் விருதுகள் வழங்கும் விழாவில், 2022-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 28 MAR 2022 11:02AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று(28.03.2022) நடைபெற்ற சிவில் விருதுகள் வழங்கும் விழா-2-ல், 2022-ம் ஆண்டுக்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இன்று விருது பெற்றவர்களில், பத்ம விபூஷன் விருது டாக்டர். பிரபா ஆத்ரே, திரு கல்யாண் சிங் (மறைவுக்கு பிந்தைய)  ஆகியோரும், பத்ம பூஷன் விருது திரு விக்டர் பானர்ஜி, டாக்டர். சஞ்சயா ராஜாராம் (மறைவுக்கு பிந்தைய), டாக்டர். பிரதிபா ராய் மற்றும் ஆச்சாரியா வஷிட்ட திரிபாதி, மற்றும் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி எல்லா, திருமதி. சுசித்ர கிருஷ்ண எல்லா (இரட்டையர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களில் ஒரு பகுதியினருக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களில் 34 பேர் பெண்கள் 10 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

***************(Release ID: 1810648) Visitor Counter : 207