சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
"தானியங்கி சோதனை நிலையங்களின் (ATS) அங்கீகாரம், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு" விதிகளில் திருத்தங்களுக்காக வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2022 1:38PM by PIB Chennai
"தானியங்கி சோதனை நிலையங்களின் (ATS) அங்கீகாரம், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு" விதிகளில் சில திருத்தங்களைச் செய்ய, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2022 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வரைவு அறிவிப்பை வெளியிட்டது : இதுமுன்னதாக 23 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.
இந்த வரைவு விதிகள் பின்வரும் அம்சங்களில் திருத்தங்களை முன்வைக்கின்றன: இந்த நிலையங்களை நிறுவுவதற்கான தகுதி அளவுகோல்கள், கருவிகளில் இருந்து சர்வருக்கு சோதனை முடிவுகளை தானாக பரிமாற்றம் செய்தல், ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மற்றொரு மாநிலத்தில் சோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் வாகனத்தை வாழ்க்கை முடித்த வாகனம் என அறிவிக்கும் அளவுகோல்கள். இரண்டு அட்டவணைகளில் சில சிறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன: அவை நடத்தப்பட வேண்டிய சோதனைகளின் பட்டியல் மற்றும் ATS இல் நிறுவப்பட வேண்டிய உபகரணங்களின் விவரக்குறிப்புகளை வழங்குகின்றன. மின்சார வாகனங்களின் சோதனைக்காக சில புதிய உபகரணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சோதனை முடிவுகளுக்காக புதிய தரப்படுத்தப்பட்ட வடிவம் சேர்க்கப்பட்டுள்ளது. வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வசதி செய்து கொடுத்தலும், வணிகம் செய்வதை எளிதாக்குவதும் இந்த முயற்சியின் நோக்கம் ஆகும். .
அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளுக்காக இந்த அறிவிப்பு 30 நாட்களுக்கு (ஏப்ரல் 24, 2022 வரை) பொதுக் களத்தில் இருக்கும்.
அரசு இதழ் அறிவிப்பைப் பார்க்க இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்.
************
(வெளியீட்டு அடையாள எண்: 1810261)
வருகையாளர் எண்ணிக்கை : 197