நித்தி ஆயோக்

2வது ஏற்றுமதி தயார்நிலைப் பட்டியல் 2021: நித்தி ஆயோக் வெளியீடு

Posted On: 25 MAR 2022 12:27PM by PIB Chennai

பெரும்பாலான கடலோர மாவட்டங்கள், ஏற்றுமதியில் சிறப்பாகச்  செயல்படுகின்றன. குஜராத் மாநிலம் 2வது முறையாக முதலாவது இடத்தில் உள்ளது.

நித்தி ஆயோக், போட்டித் திறன் மையத்துடன் இணைந்து ஏற்றுமதி தயார்நிலை பட்டியல் 2021-ஐ இன்று வெளியிட்டது.

இந்த அறிக்கை இந்தியாவின் ஏற்றுமதிச்  சாதனைகள் பற்றிய விரிவான பகுப்பாய்வு ஆகும்.  இந்த பட்டியல் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதர மாநிலங்களுடன் ஒப்பிட்டு தங்கள் செயல்பாடுகளை  மேம்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்க முடியும்.

மாநில அளவிலான ஏற்றுமதி வளர்ச்சிக்கு, முக்கியான அடிப்படை அம்சங்களை அடையாளம் காணும் தரவு அடிப்படையிலான முயற்சிதான் ஏற்றுமதி தயார்நிலைப்  பட்டியல்.

ஏற்றுமதி தயார்நிலைப்  பட்டியல் கொள்கை, வர்த்தகச் சூழல், ஏற்றுமதிச்  சூழல், ஏற்றுமதி செயல்பாடு என்ற 4 முக்கிய அம்சங்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைத்  தரவரிசைபடுத்துகிறது. இதில் 11 துணை அம்சங்களும் உள்ளன.

இந்த பட்டியல்  நித்தி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமாரால் வெளியிடப்பட்டது. 

கடலோர மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறப்பாக உள்ளன என்றும், இதில் குஜராத் முதலிடத்தில் உள்ளதையும் இந்த 2வது ஏற்றுமதித்  தயார்நிலை பட்டியல் தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809531

                                                                                **********************

 



(Release ID: 1809808) Visitor Counter : 288