ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"நிலத்தடி நீர்-காணாததைக் காண வைத்தல்" எனும் மையப் பொருளில் உலக தண்ணீர் தினம் 2022 கொண்டாட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAR 2022 4:51PM by PIB Chennai

"இளம் மனங்கள்: நதிகள் புத்தாக்கத்திற்கான உறுதி" எனும் தலைப்பிலான நிகழ்ச்சியை உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் புதுதில்லியில் ஏற்பாடு செய்தது. பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச்  சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆறுகளின் புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் இயக்குநர் திரு ஜி அசோக்குமார், செயல் இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு டி பி மதுரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. நீர் வளங்களின் நிலைத்தன்மை மிக்க மேலாண்மையை வலியுறுத்துவதற்காக இது கொண்டாடப்படுகிறது. " நிலத்தடி நீர்-காணாததை காண வைத்தல்" எனும் மையப் பொருளில் இந்த வருட உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்றவர்களுக்கு நீர் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை செய்துவைத்த அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், நீர் பஞ்சம் ஏற்பட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்குமாறு இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.

நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மழைநீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் குறித்து, தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் இயக்குநர் திரு ஜி அசோக்குமார் தமது உரையில் எடுத்துரைத்தார். மணல் சிற்பம் மற்றும் நாடகம் உள்ளிட்டவற்றின் வாயிலாக ஆறுகளின் புத்தாக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த செய்தி வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808237

************


(வெளியீட்டு அடையாள எண்: 1808346) வருகையாளர் எண்ணிக்கை : 182
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Kannada , Urdu , English , हिन्दी