நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

சென்சொடைன் பொருட்களின் விளம்பரங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

Posted On: 22 MAR 2022 2:46PM by PIB Chennai

சென்சொடைன் பொருட்களின் விளம்பரங்களுக்கு எதிராக திரு நிதி கரே தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்சொடைன் பொருட்களை “உலகளவில் பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்” என்றும் “உலகின் முதல் நிலை சென்சிட்டிவிட்டி டூத் பேஸ்ட்” என்றும் தவறாக விளம்பரப்படுத்துவதாகக் கூறி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக சென்சொடைன் பொருட்கள் வெளிநாட்டு பல் மருத்துவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்ற விளம்பரத்தை தவிர்க்குமாறு கடந்த 09.02.2022 அன்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

“உலகளவில் பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்”, “உலகின் முதல் நிலை சென்சிட்டிவிட்டி டூத் பேஸ்ட்” 60 வினாடிகளில் நிவாரணம் கிடைக்கிறது என ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்டது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள பல் மருத்துவர்களைக் கொண்டே இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்தது.

இதையடுத்து, ”உலக பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்”, “உலகின் முதல் நிலை சென்சிட்டிவிட்டி டூத்பேஸ்ட்” என்ற விளம்பரத்தை 7 நாட்களுக்குள் நீக்குமாறும், அதோடு தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808129

------



(Release ID: 1808195) Visitor Counter : 169